உடனடி செய்தி

தீயாக வேலை தேர்தல் வேலை செய்யும் பா.ஜ.க. மற்றும் பா.ம.க : தமிழக உளவுத்துறை

தீயாக வேலை தேர்தல் வேலை செய்யும் பா.ஜ.க. மற்றும் பா.ம.க : தமிழக உளவுத்துறை

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில், பா.ஜ.க மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் மிக சிறப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றும். மற்ற கட்சிகள் தேர்தல் பணியில் கொஞ்சம் மந்தமாக செயல்படுவதாக, அ.தி.மு.க., தலைமையிடம், உளவுத் துறை தகவல்.

தமிழக லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு, அ.தி.மு.க., அமைத்துள்ள கூட்டணியில், பா.ஜ.க. மற்றும் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதி கட்சி - புதிய தமிழகம் என்று ஒரு மெகாகூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஓட்டுப் பதிவுக்கு, ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ. மற்றும் பா.ம.க. கட்சி தொண்டர்களின் தேர்தல் பணி, திருப்திகரமாக இருப்பதாக, அ.தி.மு.க. தலைமையிடம், உளவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது .

மேலும் பல இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, பா.ம.க.,வுக்கு ஏழு தொகுதிகளும் , பா.ஜ.,வுக்கு ஐந்து தொகுதிகளும், தே.மு.தி.க. வுக்கு நான்கு தொகுதிகளும் வழங்கப்பட்டன. புதிய நீதி கட்சி மற்றும் புதிய தமிழகம், த.மா.கா.,வுக்கு, தலா, ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. கூட்டணிக்கு கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிய, அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்