புகழ்பெற்ற கோவில்களின் ரத வீதிகளில் தரைமட்ட கேபிள் மின்சாரம்: பாதுகாப்பு மேம்பாட்டு திட்டம் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களின் ரத வீதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், மின்சாரத்தை தரைக்கு கீழே கேபிள் மூலம் விநியோகிக்கும் திட்டத்தை மின்வாரியம் விரைவில் செயல்படுத்த உள்ளது.
தற்போது பல இடங்களில் மேல்நிலை மின்கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மழை மற்றும் புயல் காலங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுவதால் விபத்துகள் மற்றும் மின்தடை பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பெரிய கோவில்களில் நடைபெறும் தேரோட்ட விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ரத வீதிகளில் தரைக்கடியில் கேபிள் அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 10 முக்கிய கோவில்களில் பணிகள் தொடங்க உள்ளன.
மேலும், திருவண்ணாமலை கிரிவல பாதையிலும் மின்கம்பிகளை அகற்றி கேபிள் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி, சுசீந்திரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 16 கோவில்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் போன்ற இடங்களில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்