ராமேஸ்வரம் கோயிலில் ரீல்ஸ் வீடியோ சர்ச்சை; பெண்கள் நடனமாடிய காட்சிக்கு எதிர்ப்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் பிரகாரத்தில் சமூக வலைதள 'ரீல்ஸ்' வீடியோவுக்காக பெண்கள் நடனமாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பக்தர்கள் மற்றும் சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ராமநாதசுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் இருந்தாலும், மூன்றாவது பிரகாரத்தில் புகைப்படம் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பலரும் செல்போனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கோயில் பிரகாரத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்ததாக கூறப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்த சம்பவம் குறித்து ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கண்டனம் தெரிவித்தார். கோயிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படாத வகையில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், கோயிலில் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்