உடனடி செய்தி

சதுரகிரிமலை அன்னதான உணவு கூடங்களுக்கு தடை!

சதுரகிரிமலை  அன்னதான உணவு கூடங்களுக்கு தடை!

மலையில் இருக்கும் உண்டியலுக்கு தடை இல்லையா?

"சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில் அன்னதான மடங்கள் செயல்பட விதித்த தடையை நீக்கிட வேண்டும்" நெறிமுறை படுத்துங்கள் .

இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றத்திற்கும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோள்


சித்தர்கள் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் சிவனடியார்கள் மலையில் ஏறி, இயற்கை காற்றை சுவாசித்து,
தெய்வீக அனுபவங்களை உணர்ந்து சந்தன மகாலிங்கத்தையும் சுந்தரமகாலிங்கம் தெய்வத்தை வணங்கி வருவது காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை .

இந்த பக்தியோடு ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளக்கூடிய பக்தர்கள் மலைப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மலையேறி செல்வதற்கு தடை விதித்தனர்.
தற்போது சதுரகிரி மலையில் செயல்படக்கூடிய பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு செய்யக்கூடிய அன்னதான மடங்களை சுற்றுச்சூழலை காரணம் காண்பித்து செயல்படுவதற்கு நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டி மூட நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை எடுத்திருக்கிறது.

இது இந்து பக்தர்களுக்கு சிவனடியார்களுக்கு செய்யக்கூடிய சிவதுரோகம் -
அன்ன துரோகம் இந்த அடாத செயலை இந்து தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

காரணம் சிவனருளை வேண்டி மலையேறி வந்து ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள கூடிய அடியவர்களுக்கு உணவுக்கு என்ன ஏற்பாடு மேலே செய்ய முடியும்?

இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் திரு ஆர் பச்சையப்பன் அவர்கள் கூறும்போது

" ஒரு தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . கோயிலுக்கு அருகில் செயல்படக்கூடிய அன்னதானம் மடங்களால்
சமையல் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று சொல்லுகிறார்.

அதே நேரத்தில் அடிவாரத்தில் சமைத்து கோவிலில் அன்னதானம் வழங்க தடை இல்லை என்றும் சொல்கிறார்.

சரி தனியார் மடங்கள் அன்னதானம் செய்தால் சுற்றுச்சூழல் கெடுகிறது என்று சொல்லக்கூடிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும்,
வழக்கு தொடர்ந்த வரும்
கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு
இந்து சமய அறநிலையத்
துறையின் சார்பில் அன்னதான கூடங்களை
கட்டி ஏன் அன்னதானம்
வழங்க கூடாது?

அடிவாரத்தில்
உணவு சமைத்து மலையேறி உணவு வழங்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
மிகுந்தசிரமங்களை உருவாக்கும்.
இது மலையேறி வந்து சிவதரிசனம் செய்யக்கூடிய சிவனடியார்களை குறைந்த அளவில்மலை செல்வதற்கு வழிவகை செய்யக் கூடியதாகவே அமையும்.

இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வர் , மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்,
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக பக்தர்களின் நலன்கருதி ஏற்பாடு செய்திட
இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

உணவு கூடங்களை மேலே இருக்க தடைவிதித்து நடவடிக்கை
எடுக்கக் கூடிய அறநிலையத்துறை

அடிவாரத்தில் உணவு சமைக்கலாம் என்ற அறிவுரை வழங்கியது .
எந்த அளவில் பொருத்தமான
வாதம் என்று தெரியவில்லை.

அப்படியானால் மலையிலே இருக்கக்கூடிய உண்டியலை ஏன் இடமாற்றம் செய்யக்கூடாது?

உணவு வழங்க தடை உண்டிலுக்கு மட்டும் அனுமதி !

இது எந்த வகையில் நியாயம்?

இராம. இரவிக்குமார்
நிறுவனதலைவர்
இந்து தமிழர் கட்சி

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்