உடனடி செய்தி

செக்ஸ் புகார் : காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் பதவி விலகல்

செக்ஸ் புகார் : காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் பதவி விலகல்
  புதுடில்லி: செக்ஸ் புகார் காரணமாக காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் ஃபைரோஸ் கான் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியான இந்திய தேசிய மாணவர் சங்கம் ஆங்கிலத்தில் நேஷனல் ஸ்டூடன்ட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்கப்படுகிறது.   இதன் தலைவர் ஃபரோஸ் கான் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் முஸ்லீம் ஆவார். காஷ்மீர் மாநிலத்தில் இருந்து இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர்  என்பது குறிப்பிடத்தக்கது. ஃபைரோஸ் மீது ஒரு பெண் செக்ஸ் புகார் தெரிவித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. அத்துடன் இல்லாமல் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் காங்கிரஸ் தொண்டர் இவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த்ததாக டில்லி பார்லிமெண்ட் தெரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவருக்கு எதிர்ப்பு அதிகரித்ததால் தன் மீது எழுந்த பாலியல் புகார் காரணமாக ஃபைரோஸ் கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த இஸ்லாமியரது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டு இவரை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார். இவர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சி மூவர் குழு ஒன்றை அமைக்க உள்ளது. அந்தக் குழு ஃபைரோஸ் கான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணையை விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி #மீடூ குறித்து கண்டனம் தெரிவிக்கும் நேரத்தில் இது போல அவர் கட்சி இளைஞர் அணித் தலைவர்கள் ஒருவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்