உடனடி செய்தி

ஸ்டாலினுக்கு எதிராக 34 பேர், விஜய்க்கு எதிராக 46 பேர்: சென்னை தொகுதிகளில் கடும் போட்டி

ஸ்டாலினுக்கு எதிராக 34 பேர், விஜய்க்கு எதிராக 46 பேர்: சென்னை தொகுதிகளில் கடும் போட்டி
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 616 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் 173 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், 24 பேர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். இதன் மூலம், இறுதியாக 419 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதில், த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் அவரையும் சேர்த்து 47 பேர் போட்டியிடுகின்றனர். இதில், ஒரே பெயரில் இரண்டு “ஜோசப்” மற்றும் இரண்டு “விஜய்” ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், அவருக்கு எதிராக 34 பேர் களமிறங்கியுள்ளனர். அதேபோல், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 25 பேர் போட்டியிடுகின்றனர். அமைச்சர் சேகர்பாபு போட்டியிடும் தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர். சென்னை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக, அமைச்சர் சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டை தொகுதியில் 15 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 25 பேரும், தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் சாத்தூர் தொகுதியில் 22 பேரும் களமிறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
4 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
4 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
4 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
18 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்