உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

தமிழக சட்டசபை முதல் கூட்டம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு தொடக்கம்

தமிழக சட்டசபை முதல் கூட்டம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு தொடக்கம்
தமிழகத்தின் 17வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பெற்ற தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்றைய கூட்டத்தில், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக முதலமைச்சர் விஜய் முதலில் பதவியேற்றார். தொடர்ந்து மற்ற எம்எல்ஏக்களும் ஒவ்வொருவராக பதவியேற்றனர். புதிய எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் வழங்கிய காலக்கெடுவுக்குள், புதிய அரசு சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்