தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: சீரக சம்பா கிலோ ரூ.180-ஐ எட்டியது
தமிழகத்தில் அரிசி விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. போதிய மழையின்மை, நெல் விளைச்சல் குறைவு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டு தோறும் அரிசி தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உயர்தர சன்ன அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த பருவத்தில் மழைப்பொழிவு குறைவால் அங்கு நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது.
மேலும், லாரி வாடகை சுமார் 25 சதவீதம் உயர்ந்திருப்பதும், அரிசி ஆலைகளின் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்திருப்பதும் சந்தை விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தகவலின்படி, சன்ன ரக நெல்லின் கொள்முதல் விலை கடந்த சில மாதங்களில் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. இதன் தாக்கமாக பல்வேறு அரிசி ரகங்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஏற்றுமதியில் முக்கிய இடம் பெறும் சீரக சம்பா அரிசியின் விலை கடந்த ஆண்டு ரூ.84 ஆக இருந்த நிலையில், தற்போது கிலோ ரூ.180 வரை உயர்ந்துள்ளது. இது ஓராண்டில் ரூ.96 உயர்வை பதிவு செய்துள்ளது.
வறட்சி நிலை, போதிய மழையின்மை மற்றும் குறைந்த நெல் உற்பத்தி நீடித்தால், வரும் மாதங்களிலும் அரிசி விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரிசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
2 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
2 நாட்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
2 நாட்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்