தனியார் பள்ளி அங்கீகார மோசடி: ரூ.100 கோடி வழக்கில் திமுக நிர்வாகி கைது
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகி பி.டி. அரசகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், பதிவு செய்யப்படாத "தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்" என்ற பெயரில் செயல்பட்ட அரசகுமார், அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக உறுதியளித்து பல்வேறு பள்ளி நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோசடி தொடர்பான ஆரம்பகட்ட ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படும் நிலையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திமுக செய்தித் தொடர்புக் குழுவின் துணைத் தலைவராக உள்ளார். இதற்கு முன்பு அவர் பாஜகவிலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட மேலும் சில முக்கிய நபர்களின் தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அடுத்த கட்டமாக கூடுதல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
2 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
2 நாட்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
2 நாட்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்