காயத்தால் எதிரணி விலகல்; ஜப்பான் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 'சூப்பர் 750' ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் 10-வது இடத்தில் உள்ள சிந்து, ஜப்பானின் நோஜோமி ஒகுஹராவை எதிர்கொள்ள இருந்தார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே காயம் காரணமாக ஒகுஹரா விலகியதால், சிந்து நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
இந்த சீசனில் சிந்து அரையிறுதியை எட்டுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு மலேசியா ஓபன் மற்றும் ஆஸ்திரேலியா ஓபன் தொடர்களிலும் அவர் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார்.
அரையிறுதியில் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றும், உலகின் 4-வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யுபெய்யை அவர் எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை சர்வதேச போட்டிகளில் 14 முறை மோதியுள்ள நிலையில், சென் யுபெய் 8 வெற்றிகளும், சிந்து 6 வெற்றிகளும் பெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
8 மணி நேரங்கள் முன்பு
ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் இந்தியா: பெண்கள் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இன்று மோதல்
3 நாட்கள் முன்பு
சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; இந்தியா அரையிறுதிக்கு தகுதி
4 நாட்கள் முன்பு
இரண்டாவது வெற்றியை நோக்கி இந்திய பெண்கள் அணி; இன்று ஹாங்காங்குடன் மோதல்
5 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்