உடனடி செய்தி

ஆட்சியரை காரை விட்டு இறங்க செய்த மாணவி.!

ஆட்சியரை காரை விட்டு இறங்க செய்த மாணவி.!

சமீபத்தில் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி IAS அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.

அந்த விழாவில் தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி IAS அவர்கள் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அப்போது மாணவி மோனிஷா அந்த ஆட்சியரிடம், "இன்று உங்கள் கையால் பரிசு வாங்கும் நான்… படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன். ஆசிர்வதியுங்கள்" என்று கேட்க…

உடனே ஆட்சியர் "வாழ்த்துக்கள் மோனிஷா..! ஒரு நிமிடம் என்னுடன் வா!" என்று அழைத்துச் சென்று தன்னுடைய கார் கதவைத் திறந்து, "என் காரில் என் இருக்கையில் உட்கார்" என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்ததுடன், அதன் அருகே தான் கைகட்டி நின்று கொண்டு அந்த மாணவியுடன் விழாவினரை புகைப்படம் எடுக்கவும் சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், "இந்த புகைப்படத்தைச் சும்மா எடுக்கவில்லை. இதை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் உன்னுள் இருந்து கொண்டே இருக்கும். நானும் உன்னை போல்தான். ஒரு அரசு பள்ளியில் படித்துத்தான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன். நீயும் ஒருநாள் அப்படி வர எனது மனமார்ந்த ஆசீர்வாதங்கள்" என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது.

ஒரு மாணவியிடம் மிகுந்த பெருந்தன்மையுடனும் ஊக்குவிக்கும் முறையிலும் நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்

கலெக்டர் , வருங்கால கலெக்டர் இருவருக்கும் வாழ்த்துகள்..!

தொடர்புடைய செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம் | பள்ளி உத்தரவு திரும்பப் பெற கோரிக்கை
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம் | பள்ளி உத்தரவு திரும்பப் பெற கோரிக்கை
8 மணி நேரங்கள் முன்பு
ஜான் பிரிட்டோ என் உறவினர் அல்ல; ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் ஆதவ்
ஜான் பிரிட்டோ என் உறவினர் அல்ல; ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் ஆதவ்
8 மணி நேரங்கள் முன்பு
தமிழகத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி; வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி; வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
9 மணி நேரங்கள் முன்பு
மேற்கு ஆசிய பதற்றம்: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 18,000 இந்திய மாலுமிகள் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரம்
மேற்கு ஆசிய பதற்றம்: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 18,000 இந்திய மாலுமிகள் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்