உடனடி செய்தி

மத்திய பட்ஜெட் 2026–27: நிர்மலா சீதாராமன் இன்று பார்லிமென்டில் தாக்கல்

மத்திய பட்ஜெட் 2026–27: நிர்மலா சீதாராமன் இன்று பார்லிமென்டில் தாக்கல்

புதுடில்லி:
பார்லிமென்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11:00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது மத்திய பட்ஜெட் ஆகும். இதன் மூலம், தொடர்ந்து ஒன்பது மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார். மேலும், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே நேரத்தில், நடுத்தர வர்க்க மக்களை கவரும் வகையில் வரி சலுகைகள், பொருளாதார ஊக்கத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட அறிவிப்புகள் இடம் பெறலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்