உடனடி செய்தி

வ.களத்தூரில் கோர்ட் உத்தரவை மீறி சுவாமி ஊர்வலம் நிறுத்தம் -144 தடை உத்தரவு.

வ.களத்தூரில் கோர்ட் உத்தரவை மீறி சுவாமி ஊர்வலம் நிறுத்தம் -144 தடை உத்தரவு.
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இஸ்லாமியர்களின் எதிர்ப்பின் காரணமாக திருவிழா நடத்தவும் தேரோடும் ராஜ வீதியில் சுவாமி ஊர்வலம் வரவும் ஒரு நாளுக்கு மேல் காவல்துறை அனுமதிக்காத நிலை உள்ளது. காவல் துறை அனுமதிகாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப்பட்டு இந்துக்களுக்கு சாதகமாக 3 நாட்கள் திருவிழா நடத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 1 நாள் மட்டும் திருவிழா நடத்த அனுமதிக்கப்பட்டது. கடந்த இரு வருடங்களாக வேறு வழி இன்றி ஒரு நாள் சுவாமி ஊர்வலம் நடத்தப்பட்ட நிலையில் இந்தவருடம் 3 நாட்கள் நடத்தக்கோரி வ.களத்தூர் மக்கள் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரிய நிலையில் ஒரு நாள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தெரிவித்துவிட்டது. வ.களத்தூரில் 3 நாட்கள் திருவிழா நடத்தக்கோரியும் . தேரோடும் வீதியில்மாற்று மத்தினரால் ஆக்கிறமிக்கப்பட்டுளள இடங்களை அகற்றக்கோரியும்... பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் காரணமாக ஓடாமல் உள்ள வ.களத்தூர் பெரிய தேரினை ஓட்ட அனுமதி கோரியும் கடந்த (26.09.2018) புதன் அன்று வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாக பெரம்பலூரில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடைபெற்றது. மேலும் வ.களத்தூரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் 3 நாள் சுவாமி திருவிழாவை நடத்த அனுமதிக்க பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு உதரவிடக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 28.09.218 அன்று மூன்று நாட்கள் திருவிழா நடத்த அனுமதிக்கவும் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. தீர்ப்பு தந்த உற்சாகத்தில் முன்பே முடிவு செய்யப்பட்ட தேதிகளான செப்டம்பர் 28,29 மற்றும் 30. 2018 தேதிகளில் திருவிழா நடத்த வ.களத்தூர் மக்களால் முடிவு செய்யப்பட்டு முதல் நாள் நிகழ்வான ஸ்ரீ ராயப்பா சுவாமிக்கு குடி அழைப்புடன் சுவாமி திருவிழா தொடங்கியது. சுவாமிக்கு பொங்கல் மாவிளக்கு முடிந்து, சுவாமி ஊர்வலத்திற்கு சப்பரத்தில் உற்சவர் சிலைகளை வைத்து அலங்கரிக்கும் வேளையில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தனர். பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் மாவட்டதை சேர்ந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஊரை அல்லோலக படுத்திக்கொண்டிருந்தனர். சுமார் 3000 முஸ்லிம்கள் வ.களத்தூரில் வசித்து வந்தாலும் 30பேர் கொண்ட கும்பல் திருவிழா ஊர்வலம் தேரோடும் ராஜவீதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்பதால் வரக்கூடாது என்ன குழுமி கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர். திடீரென இரவு 9 மணி அளவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் புகுந்து 144 தடை உத்தரவு வ.களத்தூரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சுவாமி ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு தெருவில் யாரும் நிற்க கூடாது மீறி நின்றால் கைது செய்வோம் என மிரட்டினர். கோர்ட் அனுமதி வழங்கியும் பிரச்சினை செய்பவர்களை விட்டுவிட்டு கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஊர்வலத்தை ஏன் தடை செய்கிறீர்கள் என சில பெண்கள் கேட்கவும் செய்தனர். ஆனால் எதையும் காதில் வாங்காத பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் தன் வீட்டு வாசலில் உட்கார கூட அனுமதிக்காமல் இந்துக்களை விரட்டியது. மேலும் வ.களத்தூர் தேரடிதிடலில் சப்பரத்தில் சுவாமி சிலைகளை அலங்காரம் செய்து கொண்டிருந்த மக்களையும் விரட்டியதால் சப்பரத்தில் இருந்த அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகள் இரவு முழுதும் நடுத்தெருவில் அனாதையாக நின்றது . பிறகுகாவல்துறையே சுவாமி சிலைகளை அகற்றி வாகன மண்டபத்தில் வைத்தனர். இந்துக்களை தன் வீட்டு திண்ணையில் கூட உட்கார அனுமதிக்காத காவல் துறை பிரச்சினை செய்து கொண்டிருந்த 30 இஸ்லாமியர்களை ஒன்றும் செய்யாததோடு அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜவீதி தெருவில் கூட செல்ல அஞ்சிய காட்சி அரங்கேறியது. ஆம்பூரில் அவர்கள் ஓடவிட்டு அடித்ததெல்லாம் காவல்துறைக்கு நினைவில் வந்ததோ என்னவோ. இவ்வளவு நடந்தும் நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை கொணடு அமையான முறையில் தங்கள் வீட்டில் முடங்கினர். ஆனால் உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத பெரம்பலூர் மாவட்ட காவல் துறை இஸ்லாமியருக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 144 தடை உத்தரவு போட்டு இந்துக்களுக்கு அரசியல் சட்டம் 25 வழங்கயுள்ள வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளது. கோர்ட் உத்தரவை குப்பையில் வீசி வ.களத்தூர் இந்துக்களின் வழிபட்டு உரிமையை தடுத்த பேரம்பலுர் மாவட்ட காவல்துறை மீது ஒழுங்கு நாடவடிக்கை எடுப்பதோடு... நிறுத்தப்பட்ட 3 நாட்கள் திருவிழாவை நடத்த சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே வ.களத்தூர் இந்துக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்