உடனடி செய்தி

வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்த பெண் ..!

வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்த பெண் ..!
திரையுலகமே கவியரசு வைரமுத்து மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் புகார் குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற கவிஞர் வைரமுத்து மீது சந்தியாமேனன் என்ற பெண் பத்திரிகையாளர் தனக்கு வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டுவீட் செய்துள்ளார். தான் இளவயதில் வைரமுத்துவுடன் பணியாற்றியபோது அவர் மீதும் அவருடைய எழுத்தின்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்த டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார். அந்த டுவீட்டை அவர் சில நிமிடங்களில் டெலிட் செய்துவிட்டாலும் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தவர்கள் வைரலாக்கி வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.
vairamuthu against sexual harassment
மேலும் இந்த டுவீட்டை பாடகி சின்மயி ரீடுவீட் செய்துள்ளார். இந்த தகவலை ஒருசிலர் நம்பவில்லை எனினும் இது நடந்தது உண்மை என சின்மயி, அந்த பெண் பத்திரிகையாளருக்கு ஆதரவு கொடுத்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. vairamuthu against sexual harassmentதன்மீதான குற்றச்சாட்டுக்கு வைரமுத்து என்ன பதில் கூறப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். On lyricist Vairamuthu pic.twitter.com/c6DwYWOO6C - Sandhya Menon (@TheRestlessQuil) October 8, 2018

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்