செய்திகள்
⚡ உடனடி செய்தி
வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை முழுவதும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஹோட்டல்கள் மற்றும் சாலையோர உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலையின் தாக்கம் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டில் வணிக சிலிண்டர்களின் கிடைக்கும் அளவு குறைந்து, கள்ள சந்தையில் ஒரு சிலிண்டர் ₹5,000 வரை விற்கப்படுகின்றது.
இந்த தட்டுப்பாடு காரணமாக, பல சின்ன உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் செயல்பாட்டை குறைத்துள்ளன. சில இடங்களில் முழுமையாக மூடப்பட்டுள்ளன. காலை உணவுகளில் இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. முன்பு ₹10-க்கு கிடைத்த இட்லி தற்போது ₹15-₹20 ஆகவும், ₹15-₹20 இருந்த தோசை ₹30 வரை உயர்ந்துள்ளது.
மேலும், கலவை சாதம் ₹40-இல் இருந்து ₹60-₹70 ஆக உயர்ந்துள்ளது. முட்டை விலை குறைந்திருந்தாலும், ஆம்லெட் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது என்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், உணவகங்கள் மேலும் விலையை உயர்த்தும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உணவகங்கள் தன்னிச்சையாக விலை உயர்த்துவதை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இன்று தேர்தல் நடந்தால் அதிமுக முன்னிலை – புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு
18 மணி நேரங்கள் முன்பு
ஈரான் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்கா விமானியை மீட்டது – அதிரடி ராணுவ நடவடிக்கை
18 மணி நேரங்கள் முன்பு
ஈரான் விவகாரம்: மோடிக்கு பாராட்டு vs ராகுல் விமர்சனம் – காங்கிரஸில் உள்பிளவு தீவிரம்
1 நாட்கள் முன்பு
தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷ் அதிருப்தி வெடிப்பு – அமைச்சருடன் கடும் வாக்குவாதம்!
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்