வயநாடு நிலச்சரிவு: அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அமித் ஷா உறுதி
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி பகுதியில் உள்ள கள்ளாடி சுரங்கப்பாதை கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிலச்சரிவு பாதித்த பகுதிகளை கேரள முதல்வர் சதீசன் நேரில் ஆய்வு செய்த நிலையில், அவருடன் தொலைபேசியில் பேசிய அமித் ஷா, மாநில அரசு மேற்கொண்டுள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பாராட்டினார்.
மேலும், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், பேரிடர் பாதிப்பை சமாளிக்க மத்திய அரசின் அனைத்து வகையான உதவிகளும் கேரளாவுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
2 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
2 நாட்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
2 நாட்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்