உடனடி செய்தி

வேலுமணி ஆதரவு 5 எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி அணிக்கு தாவல் | அதிமுக அரசியல் பரபரப்பு

வேலுமணி ஆதரவு 5 எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி அணிக்கு தாவல் | அதிமுக அரசியல் பரபரப்பு
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வேலுமணி ஆதரவு அணியில் இருந்த ஐந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பழனிசாமி அணிக்கு திரும்பியுள்ளனர். த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற ஓட்டெடுப்பில், வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்திருந்தனர். அதற்கு பதிலாக அமைச்சரவை பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், த.வெ.க. அமைச்சரவை விரிவாக்கத்தில் அ.தி.மு.க. அதிருப்தி அணிக்கு இடமளிக்கப்படாததால், அந்த அணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் பின்னணியில், ஆற்காடு சுகுமார், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கர், பண்ருட்டி மோகன், காங்கேயம் நடராஜன், அந்தியூர் ஹரிபாஸ்கர் ஆகிய ஐந்து எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி அணிக்கு திரும்பியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்த அவர்கள், முன்னர் த.வெ.க. அரசுக்கு அளித்த ஆதரவு கடிதத்தை வாபஸ் பெறும் மனுவையும் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இனி பழனிசாமி தலைமையில் செயல்படுவோம்’ பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐந்து எம்.எல்.ஏ.க்கள், “சட்டசபை அ.தி.மு.க. தலைவராக பழனிசாமியை நாங்கள் ஏற்கிறோம். இடையில் நடந்த சில தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளோம். இனி பழனிசாமி தலைமையில் செயல்படுவோம்” என்று கூறினர். அரசியல் சமன்பாட்டில் மாற்றம் முன்னதாக வேலுமணி அணியில் இருந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த நிலையில், தற்போது மேலும் ஐந்து பேர் பழனிசாமி அணிக்கு திரும்பியது, அ.தி.மு.க. உள்கட்சிச் சமன்பாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனிசாமி விமர்சனம் இதனிடையே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வர் விஜய் அரசை பழனிசாமி கடுமையாக விமர்சித்து, “மடைமாற்று அரசியலில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

த.வெ.க. அரசின் கணக்கு: 116-ல் 107; பெரும்பான்மைக்கு நெருக்கம்
த.வெ.க. அரசின் கணக்கு: 116-ல் 107; பெரும்பான்மைக்கு நெருக்கம்
1 மணி நேரங்கள் முன்பு
இடைத்தேர்தல் சீட் வேண்டுமா? வாரிய பதவி வேண்டுமா? குழப்பத்தில் 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
இடைத்தேர்தல் சீட் வேண்டுமா? வாரிய பதவி வேண்டுமா? குழப்பத்தில் 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
1 மணி நேரங்கள் முன்பு
தமிழக அரசியலில் பரபரப்பு; 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கட்சி மாறினர்
தமிழக அரசியலில் பரபரப்பு; 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கட்சி மாறினர்
2 மணி நேரங்கள் முன்பு
துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்