உடனடி செய்தி

விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி

விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆதரவு கடிதம் தொடர்பான சர்ச்சையில் தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், அமமுக எம்எல்ஏ காமராஜர் கையெழுத்திட்டதாக வெளியான ஆதரவு கடிதம் மற்றும் வீடியோ குறித்து பல கேள்விகளை எழுப்பினார். “அந்த வீடியோவை யார் பதிவு செய்தது? அது உண்மையா? ஒரிஜினல் ஆதரவு கடிதம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், வெளியான வீடியோ AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தினகரன் மேலும், “ஒரு அரசை அமைப்பதற்கே இத்தகைய மோசடி நடைபெறுகிறது என்றால், ஆட்சி வந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என எச்சரித்தார். விஜய் அளித்ததாக கூறப்படும் அனைத்து ஆதரவு கடிதங்களையும் தமிழக ஆளுநர் ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜனநாயக முறையில் ஆதரவை கேட்க வேண்டுமே தவிர, போலியான ஆவணங்கள் மூலம் ஆதரவை உருவாக்குவது தவறு எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்