உடனடி செய்தி

விஜய் பிரசாரம் முதல் நாளே மாற்றம்: பாதுகாப்பு குறைவால் கூட்டம் ரத்து

விஜய் பிரசாரம் முதல் நாளே மாற்றம்: பாதுகாப்பு குறைவால் கூட்டம் ரத்து
சென்னை: த.வெ.க. தலைவர் விஜய், தாம் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பெரம்பூரிலும், பின்னர் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் இரவு 7:00 மணி வரை பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே, மதியம் 1:30 மணிக்கு பெரம்பூரில் விஜய் பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, கொளத்தூரில் மாலை 4:30 மணியளவில் பிரசாரம் நடைபெற்றது. அங்கு எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரண்டதால், திட்டமிட்டபடி விஜயால் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பிரசார கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனக் கூறி, விஜய் அங்கு பிரசாரம் செய்யாமல் வீடு திரும்பினார். இதுகுறித்து த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “விஜயின் பிரசார பயணத்தின் போது மக்கள் தன்னிச்சையாக அதிக அளவில் திரண்டனர். ஆனால் சென்னை காவல்துறை சார்பில் போதுமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மக்கள் மற்றும் விஜயின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வில்லிவாக்கம் கூட்டம் ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
3 மணி நேரங்கள் முன்பு
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
3 மணி நேரங்கள் முன்பு
உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'
உரிமம் இல்லாத உணவுக்கடைகளுக்கு ரூ.10,000 வரை அபராதம்: போதைப்பொருள் விற்றால் கடைக்கு 'சீல்'
2 நாட்கள் முன்பு
மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
மிலாது நபி நன்னாள்: முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வாழ்த்து
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்