விஜய் விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை; ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் குழப்பம்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக கவர்னர் அர்லேக்கரை மீண்டும் சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால், பெரும்பான்மையை எவ்வாறு நிரூபிப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த விளக்கம் கவர்னருக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, “113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் நிலையான ஆட்சி அமைக்க முடியுமா? மேலும் எந்த கட்சிகள் ஆதரவு தரும்? பதவியேற்புக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க என்ன உத்தரவு உள்ளது?” என கவர்னர் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த விஜய், அரசியல் மரபுகளின்படி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பெரும்பான்மை தொடர்பான உறுதியான விளக்கம் இல்லாததால், பதவியேற்பு குறித்து கவர்னர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இதேவேளை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸையும் கவர்னர் நேரில் சந்திக்க அழைத்துள்ளார். மேலும், காபந்து முதல்வர் ஸ்டாலினுடனும் ஆலோசனை நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் அகற்றப்பட்டதால், அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
15 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
15 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்