உடனடி செய்தி

விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது

விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் விமானப்படை அதிகாரியின் மனைவி பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றத்துக்கு ஆளானதாகக் கூறப்படும் வழக்கில், முக்கிய குற்றச்சாட்டுக்குட்பட்ட மதகுருவை போலீசார் கைது செய்துள்ளனர். 24 வயதான பெண் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், அவரது பள்ளித் தோழரான அயாஸ் மடாரே நிலம் வாங்குவது தொடர்பாக அவரை அணுகியதாக கூறப்படுகிறது. ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பின் போது, மயக்க மருந்து கலந்த குளிர்பானம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வீடியோ பதிவு மூலம் மிரட்டப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பல்வேறு மிரட்டல்களின் மூலம் பணம் பறிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மே மாதம், அயாஸ் மடாரே மற்றும் அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகியோர் பெண்ணை கல்மேஷ்வர் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு மதகுரு முன்னிலையில், பெண்ணை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெண்ணின் கணவர் நாக்பூர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அயாஸ் மடாரே மற்றும் அமீன் ஷேக் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்குட்பட்ட மதகுரு ஹஸ்ரத் மவுலானாவை தேடி வந்த போலீசார், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம் தமியா கிராமத்தில் அவரை கைது செய்தனர். சம்பவத்தில் அவரது பங்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்