Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 09 Feb 2026

தேசிய நலனே இந்தியாவின் எரிசக்தி கொள்கைக்கு அடிப்படை : விக்ரம் மிஸ்ரி

இந்தியாவின் எரிசக்தி தொடர்பான அனைத்து முடிவுகளும் நாட்டின் தேசிய நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல் குறித்து எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து முடிவு எடுப்பதாக கூறினார். எண்ணெய் கிடைக்கும் அளவு, சர்வதேச அரசியல் சூழல், விலை மாற்றங்கள், நிதி சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணிகள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றார்.

இந்தியா தற்போது 80 முதல் 85 சதவீதம் வரை எண்ணெய் மற்றும் காஸ் இறக்குமதியை சார்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இது பணவீக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எரிசக்தி கொள்கையில் கூடுதல் கவனம் தேவை என்றார்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், நுகர்வோர் நலனையும் சமநிலைப்படுத்தி எரிசக்தி துறையில் முடிவுகள் எடுக்கப்படுவது இயல்பானதே என்றும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்