சேலம் திமுக எம்பி செல்வகணபதி பேச்சு சர்ச்சை: ஹிந்து வழிபாட்டு முறைகள் குறித்து விமர்சனம், கடும் எதிர்ப்பு
சேலம்: ஹிந்து மத வழிபாடு மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை கேலி, கிண்டல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள செல்வகணபதி அவர்களின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சேலத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் மற்றும் மந்திரங்கள் குறித்து விமர்சன கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவரது உரையில், “நான் சொன்னது எனக்கும் புரியாது, உனக்கும் புரியாது” என்று கூறிய பகுதி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் கருத்து ஹிந்து மத சடங்குகள் மற்றும் மந்திரங்களை இழிவுபடுத்துவதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோ பரவியதையடுத்து, நெட்டிசன்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பேசலாமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திராவிட முன்னேற்ற கழகம் மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் ‘மத விரோத போக்கு’ குற்றச்சாட்டு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக இதேபோன்ற கருத்து சர்ச்சையில் சிக்கிய பொன்முடி பதவி இழந்தது நினைவுகூரப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்பதையும் அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.