ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: உணவுப் பொருள் தடைக்கு எதிர்ப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK), பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அதிருப்தியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை தடுத்ததாக கூறப்படும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டக்காரர்கள் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக உரிமைகள் மற்றும் பொருளாதார நிவாரணம் கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ராவலகோட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, உரிமைகளை வலியுறுத்தும் கூட்டுப் போராட்ட அமைப்புகள் கடையடைப்பு, போக்குவரத்து நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செல்லும் உணவுப் பொருட்கள், தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் மூலம் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியே பரவாமல் தடுக்க சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் பேசிய கூட்டுக் குழு தலைவர் சர்தார் அமான் கான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஆட்சியும் நீடிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
இந்தப் போராட்டம் தொடர்பான நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருந்து வருவதால், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
2 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
2 நாட்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
2 நாட்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்