திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தை தடுக்க கோரிக்கை: ஹிந்து முன்னணி போலீசில் நடவடிக்கை வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் 'திருப்பரங்குன்றம் பைல்ஸ்' ஆவணப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும், அதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்திற்கு எதிராக 'திருப்பரங்குன்றம் பைல்ஸ்' என்ற ஆவணப்படம் திரையிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் விசாரணை மேற்கொண்டு, இந்த நிகழ்வு சட்டவிரோதமானது எனக் கூறி சென்னையில் போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இது தனியார் முன்னோட்ட (Preview) திரையரங்கில் நடைபெறும் நிகழ்வு எனக் கூறப்பட்டாலும், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதால், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல் பொது காட்சியாக வெளியிடுவது சட்டத்திற்கு முரணானது என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
எனவே, தமிழக போலீசார் உடனடியாக தலையிட்டு ஆவணப்பட வெளியீட்டை தடுக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, ஆவணப்படத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆவணப்படம் திரையிடப்படும் எனக் கூறப்படும் முன்னோட்ட திரையரங்கம் முன்பு ஹிந்து முன்னணி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
2 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
2 நாட்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
2 நாட்கள் முன்பு
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்