ஆள் சேர்ப்பதை விட ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்; முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, மாநில அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கும் முயற்சிகள் கண்டனத்துக்குரியது என்றும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசுப் பள்ளிகளில் ரீல்ஸ் எடுக்கும் நிகழ்வுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், மாநிலத்தில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய கமிஷன் அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் ‘வழிகாட்டி’ நிறுவனத்தின் பங்கு குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, அரசியல் ரீதியாக ஆள் சேர்ப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, மாநில நிர்வாகம் மற்றும் மக்கள் நலப் பணிகளில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உதயநிதி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சிங்கப்பெண் சிறப்பு படை குறித்து கூறப்பட்ட கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்