உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

ரூ.400 கோடி கோவில் நிலங்களை விற்க முயற்சி? தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் சொத்து விவகாரம்

ரூ.400 கோடி கோவில் நிலங்களை விற்க முயற்சி? தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் சொத்து விவகாரம்
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.400 கோடி மதிப்புள்ள நிலங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் வெளியிட்டுள்ள தகவலின்படி, திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு 20.47 ஏக்கர் நிலம் தர்ம சொத்தாக வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலங்கள் கடந்த நூற்றாண்டில் கோவிலின் தர்ம காரியங்களான அன்னதானம், திருமஞ்சனம், நிவேதனம் உள்ளிட்ட நிரந்தர சேவைகளுக்காக தானமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சொத்துகள் கோவிலுக்குரிய சமய அறக்கட்டளை சொத்துகள் என்பதால், அவற்றை வாரிசுகள் அல்லது தனியார் அறக்கட்டளைகள் விற்பனை செய்ய முடியாது என்றும், வாரிசுகள் இல்லாத சூழலில் சொத்துகளின் முழு நிர்வாக உரிமை கோவிலுக்கே செல்லும் வகையில் ஆவணங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2024ஆம் ஆண்டு புதிய அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, கோவில் சொத்துகளை தனியார் அறக்கட்டளை சொத்துகளாக சித்தரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையை வழக்கில் தரப்பாக சேர்க்காமல் தீர்ப்பு பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சுமார் 5.44 ஏக்கர் நிலம் மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், உரிமை மாற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், காவல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
23 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
23 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்