விளையாட்டு
⚡ உடனடி செய்தி
செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்: ரூ.48 லட்சம் பரிசு
அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் செஸ் கிளப்பில் நடந்த 'கிராண்ட் செஸ் டூர்' தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' முறையில் நடைபெற்ற இத்தொடரில் முதலில் நடந்த ரேபிட் பிரிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவில் 18 சுற்றுகள் நடத்தப்பட்டன. இதில் 11.5 புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தா, அந்தப் பிரிவிலும் முதலிடத்தை கைப்பற்றினார். அனிஷ் கிரி, ஜோர்டன் வான் பாரீஸ்ட் மற்றும் பெரஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்தார்.
ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளை சேர்த்து மொத்தம் 23.5 புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தா, செயின்ட் லுாயிஸ் தொடரின் சாம்பியன் ஆனார். உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ் 22 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும், அமெரிக்காவின் வெஸ்லே 20.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடமும் பிடித்தனர்.
'கிராண்ட் செஸ் டூர்' தொடரின் நான்கு சுற்றுகள் முடிவில் பேபியானோ 25 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 24.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வெஸ்லே 23.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், வின்சென்ட் 21 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
கிராண்ட் செஸ் டூரின் 5வது மற்றும் கடைசி தொடர் ஆகஸ்ட் 10 முதல் 20ம் தேதி வரை செயின்ட் லுாயிசில் நடைபெறுகிறது. இதில் 'டாப்-4' இடத்தை தக்க வைத்துக்கொண்டால், ஆகஸ்ட் 22 முதல் 27 வரை நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
செயின்ட் லுாயிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு கோப்பையுடன் ரூ.48 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறிய தான்வி சர்மா
1 நாட்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அசத்தல்
2 நாட்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்தும் முதலிடம்
3 நாட்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதலிடம்
4 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்