பழனி கோவில் நில மோசடி: சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது; விசாரணை தீவிரம்
திண்டுக்கல்: பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் குறைந்த மதிப்பில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம், பழனி அடிவாரத்தில் உள்ள மடத்தின் நிலம் இரண்டு தனிநபர்களுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பழனி கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், துறை ரீதியாக மாவட்ட பதிவாளர் மற்றும் சார்-பதிவாளர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், 90-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அறக்கட்டளை நிர்வாகி, நிலம் வாங்கியவர்கள் மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ஜஸ்டின் மணிகண்டன் தலைமறைவானார். பின்னர் கொடைக்கானல் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, அவரை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெயபிரகாஷின் வீட்டில் போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் அவரது இருப்பிடம் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ரூ.400 கோடி கோவில் நிலங்களை விற்க முயற்சி? தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் சொத்து விவகாரம்
3 மணி நேரங்கள் முன்பு
பார்லி. முடக்கம் தொடருமா? ராகுலுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை பலனின்றி முடிவு
1 நாட்கள் முன்பு
கேரளாவில் கனமழை தீவிரம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு, நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள்
1 நாட்கள் முன்பு
தமிழக நிதிநிலை சீரடைய குறைந்தது 2 ஆண்டுகள் தேவை: பட்ஜெட்டில் அரசு விளக்கம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்