உடனடி செய்தி

அந்தமானில் கடலடியில் 2,400 சதுர மீட்டர் தேசியக்கொடி விரித்து கின்னஸ் சாதனை

அந்தமானில் கடலடியில் 2,400 சதுர மீட்டர் தேசியக்கொடி விரித்து கின்னஸ் சாதனை
போர்ட் பிளேயர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்வராஜ் தீவில் கடலடியில் பிரமாண்டமான இந்திய தேசியக்கொடி விரித்து கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கொடி, வங்காள விரிகுடாவின் நீர்மட்டத்தின் கீழ் விரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை நிகழ்த்த வனத்துறை, கடலோர காவல் படை மற்றும் தனியார் ஸ்கூபா டைவிங் குழுவினர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் இணைந்து பணியாற்றினர். இந்த முயற்சியின் மூலம் அந்தமான் தீவுகளை உலகத் தரம் வாய்ந்த ஸ்கூபா டைவிங் மற்றும் கடல்சார் சுற்றுலா மையமாக மேம்படுத்துவது நோக்கமாக உள்ளது. இந்த சாதனைக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் தேவேந்திர குமார் ஜோஷி கின்னஸ் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். மேலும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மே 3ஆம் தேதி ஸ்வராஜ் தீவில் உள்ள லைட் ஹவுஸ் அருகே கடலடியில் குறைந்தபட்சம் 10 மீட்டர் உயரத்தில் மனித அடுக்கை உருவாக்கி மற்றொரு கின்னஸ் சாதனை முயற்சியும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
13 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
14 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்