உடனடி செய்தி

அனுமதியில்லா சமூக வலைதள பதிவுகள் தடை – தமிழக தேர்தல் அதிகாரியின் முக்கிய அறிவிப்பு

அனுமதியில்லா சமூக வலைதள பதிவுகள் தடை – தமிழக தேர்தல் அதிகாரியின் முக்கிய அறிவிப்பு
சென்னை: சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் தவறாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், ஒருவரின் அனுமதியின்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக பயன்படுத்தி வாக்காளர்களை திசை திருப்பும் எந்தவொரு பதிவுகளும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சமூக மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட முன், மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட வீடியோக்களுக்கு, “AI மூலம் உருவாக்கப்பட்டது” அல்லது “டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்ட உள்ளடக்கம்” போன்ற தெளிவான குறிச்சொற்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகளின் சமூக வலைதள பக்கங்களில் சட்டவிரோத அல்லது தவறான வீடியோக்கள் கண்டறியப்பட்டால், மூன்று மணி நேரத்திற்குள் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்களின் ஆண்டு ஊதியம் ரூ.6000 இலிருந்து ரூ.12000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எஸ்.ஐ.ஆர் பணிக்காக ரூ.2000 சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மேலும், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு வளாகங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 14 இடங்களில் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்