உடனடி செய்தி

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தி.மு.க.வில் தற்காலிக ‘நோ என்ட்ரி’ – புதிய முடிவால் அதிர்ச்சி

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தி.மு.க.வில் தற்காலிக ‘நோ என்ட்ரி’ – புதிய முடிவால் அதிர்ச்சி
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைய விரும்பும் நிர்வாகிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்ததாவது: கட்சியில் தற்போது 78 மாவட்ட செயலர்கள், 25 சார்பு அணிகள், 126 எம்.எல்.ஏ.க்கள், 22 எம்.பி.க்கள் மற்றும் 11 ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அ.தி.மு.க.விலிருந்து வந்த 11 பேர் மாவட்ட செயலர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் பலர் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளனர். சமீப காலங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நிலோபர் கபில், முன்னாள் எம்.பி.க்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். இதன் பின்னர், அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காதோர் மற்றும் மீண்டும் கட்சியில் சேர முடியாதவர்கள் தி.மு.க.வில் இணைய ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ‘அ.தி.மு.க. பலம் குறைந்தால் தமிழகத்தில் பா.ஜ. வலுவடையும்’ என்ற அரசியல் கணிப்பின் அடிப்படையில், அ.தி.மு.க.விலிருந்து வர விரும்புவோருக்கு தற்காலிக ‘நோ என்ட்ரி’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க.வில் இணைய விண்ணப்பித்திருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்