உடனடி செய்தி

சத்தமின்றி உயர்ந்த சொத்து வரி: கிராம மக்களுக்கு அதிர்ச்சி

சத்தமின்றி உயர்ந்த சொத்து வரி: கிராம மக்களுக்கு அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் வீடுகளுக்கான சொத்து வரி கணிசமாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட குழப்பங்களால், பல இடங்களில் 100% க்கும் அதிகமாக வரி உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முக்கிய வருவாய் ஆதாரமாக சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இதனைப் போலவே, நிர்வாக வசதிக்காக கிராமப்புறங்களில் இருந்த வீட்டு வரியை “சொத்து வரி” என மாற்ற தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆரம்பத்தில் இது பெயர் மாற்றம் என கருதப்பட்டாலும், தற்போது நடைமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நகரங்களில் இருப்பது போல் வாடகை மதிப்பீட்டு அடிப்படையில் அல்லாமல், கிராமங்களில் சதுர அடிக்கு நேரடியாக வரி கணக்கிடப்படுகிறது. இதனால் முன்பு ரூ.50 அளவில் வீட்டு வரி செலுத்தியவர்கள், தற்போது ரூ.500 முதல் ரூ.5000 வரை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சில பகுதிகளில் சதுர அடிக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திடீர் உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் ஒரே மாதிரியான கணக்கீட்டு முறையை பின்பற்றாமல் செயல்படுவதால், வரி சுமை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த உயர்வு குறித்து பலருக்கும் இன்னும் தெரியாத நிலையில், வரி செலுத்தும் போது மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்