உடனடி செய்தி

ஹார்முஸ் ஜலசந்தி மீதான சர்ச்சை தீவிரம்

ஹார்முஸ் ஜலசந்தி மீதான சர்ச்சை தீவிரம்
ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்த நிலையில், அந்தக் கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி, அமெரிக்கா தனது நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவது, முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிப்பது மற்றும் லெபனான், காசா உள்ளிட்ட பகுதிகளில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறுவதால் உண்மை நிலை மாறாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்: மத்திய உள்துறை அமைச்சர்
அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்: மத்திய உள்துறை அமைச்சர்
15 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிர்வாகத்தில் பிற துறை அதிகாரிகள் நியமனமா? ஹிந்து முன்னணி கேள்வி
கோவில் நிர்வாகத்தில் பிற துறை அதிகாரிகள் நியமனமா? ஹிந்து முன்னணி கேள்வி
15 மணி நேரங்கள் முன்பு
'எப்.சி.ஆர்.ஏ., 2.0 அமலானால் பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் பாதுகாப்பும் வலுப்படும்' - ஆடிட்டர் சேகர்
'எப்.சி.ஆர்.ஏ., 2.0 அமலானால் பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் பாதுகாப்பும் வலுப்படும்' - ஆடிட்டர் சேகர்
1 நாட்கள் முன்பு
நீட், எப்.சி.ஆர்.ஏ., சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நீட், எப்.சி.ஆர்.ஏ., சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்