உடனடி செய்தி
விளையாட்டு ⚡ உடனடி செய்தி

காமன்வெல்த் பதக்கங்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய நட்சத்திரங்கள்

காமன்வெல்த் பதக்கங்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய நட்சத்திரங்கள்
புதுடில்லி: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். காமன்வெல்த் விளையாட்டின் 23வது சீசனில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு, 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்றது. இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள் நேற்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது தாங்கள் வென்ற பதக்கங்களை பிரதமரிடம் காண்பித்தனர். இந்திய வீரர்களின் சாதனையை பாராட்டிய பிரதமர் மோடி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், நாட்டை தொடர்ந்து பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் ஊக்கமளித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக் ஷி, பிரதமரை சந்தித்தது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்