உடனடி செய்தி

செயின்ட் லூயிஸில் பிரக்ஞானந்தா அசத்தல்; சிந்தரோவை வீழ்த்தி முன்னேற்றம்

செயின்ட் லூயிஸில் பிரக்ஞானந்தா அசத்தல்; சிந்தரோவை வீழ்த்தி முன்னேற்றம்
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்று வரும் சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார். கிராண்ட் செஸ் டூரின் ஐந்தாவது மற்றும் இறுதித் தொடரான இந்தப் போட்டியில் உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டாவது சுற்றில், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்ற உக்ரைனின் சிந்தரோவை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். வெள்ளைக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, தொடக்கம் முதல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 67வது நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் இருந்தனர். ஆனால், 82வது நகர்த்தலில் சிந்தரோவ் செய்த தவறை திறமையாகப் பயன்படுத்திய பிரக்ஞானந்தா, 95வது நகர்த்தலில் வெற்றியை உறுதி செய்தார். இரண்டு சுற்றுகள் முடிவில், பிரக்ஞானந்தா உட்பட ஐந்து வீரர்கள் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உலக கோப்பை ஹாக்கியில் புதிய போட்டி முறை: காலிறுதி ரத்து; அரையிறுதிக்கு நேரடி வாய்ப்பு
உலக கோப்பை ஹாக்கியில் புதிய போட்டி முறை: காலிறுதி ரத்து; அரையிறுதிக்கு நேரடி வாய்ப்பு
1 நாட்கள் முன்பு
கிளாஸ்கோ உணவகத்தில் இந்திய வரைபடத் தவறு: லவ்லினாவை பாராட்டிய பிரதமர் மோடி
கிளாஸ்கோ உணவகத்தில் இந்திய வரைபடத் தவறு: லவ்லினாவை பாராட்டிய பிரதமர் மோடி
2 நாட்கள் முன்பு
காமன்வெல்த் பதக்கங்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய நட்சத்திரங்கள்
காமன்வெல்த் பதக்கங்களுடன் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய நட்சத்திரங்கள்
3 நாட்கள் முன்பு
செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்: ரூ.48 லட்சம் பரிசு
செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்: ரூ.48 லட்சம் பரிசு
5 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்