உடனடி செய்தி

கோவில் நிர்வாகத்தில் பிற துறை அதிகாரிகள் நியமனமா? ஹிந்து முன்னணி கேள்வி

கோவில் நிர்வாகத்தில் பிற துறை அதிகாரிகள் நியமனமா? ஹிந்து முன்னணி கேள்வி
ஹிந்து சமய அறநிலையத்துறையில் உதவி கமிஷனர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளுக்கான தகுதி விதிகளை தளர்த்தக் கூடாது என்று ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, உதவி கமிஷனர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் நியமிக்கப்படுபவர்கள் சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த விதியை மாற்றி, வருவாய்த் துறை உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோவில் நில ஆக்கிரமிப்பு, சொத்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சட்ட ரீதியான பிரச்னைகளை திறம்பட கையாள்வதற்காகவே இந்த விதி உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹிந்து மதம் மற்றும் கோவில் நிர்வாகம் தொடர்பான அறிவும் அனுபவமும் உள்ளவர்களால் மட்டுமே கோவில்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, அறநிலையத்துறையின் தற்போதைய நியமன விதிகளில் எந்த மாற்றமும் செய்யாமல், நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையிலேயே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி மீதான சர்ச்சை தீவிரம்
ஹார்முஸ் ஜலசந்தி மீதான சர்ச்சை தீவிரம்
14 மணி நேரங்கள் முன்பு
அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்: மத்திய உள்துறை அமைச்சர்
அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்: மத்திய உள்துறை அமைச்சர்
15 மணி நேரங்கள் முன்பு
'எப்.சி.ஆர்.ஏ., 2.0 அமலானால் பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் பாதுகாப்பும் வலுப்படும்' - ஆடிட்டர் சேகர்
'எப்.சி.ஆர்.ஏ., 2.0 அமலானால் பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் பாதுகாப்பும் வலுப்படும்' - ஆடிட்டர் சேகர்
1 நாட்கள் முன்பு
நீட், எப்.சி.ஆர்.ஏ., சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நீட், எப்.சி.ஆர்.ஏ., சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்