உடனடி செய்தி

ஈரான் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்கா விமானியை மீட்டது – அதிரடி ராணுவ நடவடிக்கை

ஈரான் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்கா விமானியை மீட்டது – அதிரடி ராணுவ நடவடிக்கை
துபாய்: ஈரான் எல்லைக்குள் சிக்கியிருந்த அமெரிக்க விமானப் படை வீரரை, திரைப்பட காட்சிகளை நினைவூட்டும் வகையில் அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், தெற்கு ஈரானில் உள்ள ராணுவ இலக்குகளை தாக்க சென்ற F-15E Strike Eagle விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் அவசர வெளியேற்றம் மூலம் தப்பினர். அவர்களில் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் மலைப்பகுதியில் சிக்கி இருந்தார். காயங்களுடன் இருந்த அந்த விமானி, ஈரான் படைகள் மற்றும் உள்ளூர் குழுக்களிடமிருந்து மறைந்து உயிர் தப்பிக்க போராடினார். இதற்கிடையில், அந்த விமானியை பிடிக்க ஈரான் பரிசு அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், CIA தவறான தகவல் பரப்பி எதிரிகளை திசைதிருப்பியது. இதன் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மாற்றப்பட்டன. பின்னர் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆளில்லா விமானங்களின் உதவியுடன் விமானியின் இருப்பிடம் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, F-35 Lightning II விமானங்கள் ரேடார் கண்காணிப்பை சமாளித்தன. A-10 Thunderbolt II விமானங்கள் தரை தாக்குதல்களை தடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டன. மேலும், HH-60W Jolly Green II ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. அமெரிக்க சிறப்பு படையினர் இரவு நேரத்தில் தரை வழியாக நுழைந்து பாதுகாப்பு வளையம் அமைத்தனர். இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், அமெரிக்க படைகள் பதிலடி கொடுத்து எதிரிகளை விரட்டின. அதன் பின்னர் காயமடைந்த விமானி ஹெலிகாப்டரில் ஏற்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். இந்த நடவடிக்கையில் எந்த உயிரிழப்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து Donald Trump, “இது அமெரிக்க ராணுவத்தின் மிக துணிச்சலான மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும்” என்று தெரிவித்தார். ஆனால், இதற்கு பதிலாக ஈரான் தரப்பில், இந்த நடவடிக்கையின் போது அமெரிக்க விமானங்கள் தாக்கப்பட்டதாகவும், சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
23 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
1 நாட்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்