உடனடி செய்தி

இந்திய தேசியக் கொடி நிறங்களில் ஜொலித்த தாஷ்கண்ட் ஹில்டன்; பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இந்திய தேசியக் கொடி நிறங்களில் ஜொலித்த தாஷ்கண்ட் ஹில்டன்; பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள ஹில்டன் ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள், இந்திய தேசியக் கொடியின் மூவர்ண நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டன. பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுக்கு நான்கு நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தாஷ்கண்ட் விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடியை, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேரில் வரவேற்றார். பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணம் இது நான்காவது முறையாகும். பிரதமரின் வருகையை முன்னிட்டு தாஷ்கண்ட் நகரின் முக்கிய கட்டடங்கள் இந்திய தேசியக் கொடியின் நிறங்களில் அலங்கரிக்கப்பட்டன. குறிப்பாக ஹில்டன் ஹோட்டல் மூவர்ண விளக்குகளில் ஜொலித்தது. தாஷ்கண்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், தாஷ்கண்டில் நடைபெற்ற சமூக வரவேற்பு, இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் கலாசார உறவுகளை பிரதிபலிக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். லால் பகதூர் சாஸ்திரி இந்திய கலாசார மைய மாணவர்களின் கதக் நிகழ்ச்சியும் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடம் மற்றும் 'ஓரியன்டல் ஸ்டீஸ்' பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மையத்தையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். மேலும், இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் தொடர்பு, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

செம்மஞ்சேரி சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்தில் திருப்பம்: ரூ.206 கோடி கட்டுமான ஒப்பந்தம் ரத்து
செம்மஞ்சேரி சர்வதேச விளையாட்டு நகரத் திட்டத்தில் திருப்பம்: ரூ.206 கோடி கட்டுமான ஒப்பந்தம் ரத்து
2 மணி நேரங்கள் முன்பு
விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் எஸ். வேதாந்தம் மறைவு; 75 ஆண்டுகால ஹிந்து சமூகப் பணிக்கு முற்றுப்புள்ளி
விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் எஸ். வேதாந்தம் மறைவு; 75 ஆண்டுகால ஹிந்து சமூகப் பணிக்கு முற்றுப்புள்ளி
2 மணி நேரங்கள் முன்பு
நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
நேபாள வெள்ளத்தில் 63 இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
1 நாட்கள் முன்பு
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
நேபாளத்தில் பயங்கர திடீர் வெள்ளம்: 392 பேர் பலி; 1,500 பேர் மாயம் – 57 தமிழர்களின் நிலை கவலைக்கிடம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்