காயம் காரணமாக ஆசிய விளையாட்டு உட்பட அனைத்து போட்டிகளில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்
புதுடில்லி: கணுக்கால் காயம் காரணமாக இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டு உள்ளிட்ட நடப்பு சீசனின் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்திய தடகளத்தின் முன்னணி வீரரான 28 வயது நீரஜ் சோப்ரா, 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். தொடர்ந்து 2023 புடாபெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் கைப்பற்றினார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்திய தடகள வரலாற்றில் தனித்துவமான சாதனையை படைத்தார்.
சமீபத்தில் லாசேன் டைமண்ட் லீக் போட்டியில் 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, மீண்டும் சிறந்த பார்மிற்கு திரும்பியிருந்தார். இதன் மூலம் செப்டம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் பெல்ஜியத்தில் நடைபெறும் டைமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றிருந்தார்.
மேலும், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்று பதக்கம் வெல்லும் நோக்கில் தயாராகி வந்தார்.
இந்நிலையில், பயிற்சியின் போது கணுக்கால் பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து, நடப்பு சீசனின் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகி, முழுமையாக காயத்தில் இருந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்த நீரஜ் சோப்ரா முடிவு செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கிராண்ட் செஸ் டூர் வரலாற்றில் பிரக்ஞானந்தா புதிய சாதனை: முதல் இந்திய சாம்பியன்
1 நாட்கள் முன்பு
ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி
2 நாட்கள் முன்பு
பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் அபாரம்: இந்திய பவுலர்களின் பிடியில் இலங்கை
3 நாட்கள் முன்பு
துருவ் ஜுரல் அபார சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா 503 ரன்கள் குவிப்பு
5 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்