உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

இரு நாளில் நல்ல செய்தி; எம்.எல்.ஏ.க்களுக்கு பழனிசாமி நம்பிக்கை

இரு நாளில் நல்ல செய்தி; எம்.எல்.ஏ.க்களுக்கு பழனிசாமி நம்பிக்கை
தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக உள்ள நிலையில், அ.தி.மு.க. சார்ந்த 46 எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி பல எம்.எல்.ஏ.க்கள் அங்கு வந்து தங்கியுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆலோசனையில் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ரிசார்ட்டிற்கு வந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தனிப்பட்ட ஆலோசனை நடத்தினார். பின்னர் எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். இந்த ஆலோசனையின் போது, “இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும். அதுவரை அனைவரும் இங்கேயே தங்கியிருங்கள்” என்று பழனிசாமி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் புதிய அரசியல் நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்