கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பரிசுப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு தி.மு.க. சார்பில் பல பகுதிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சில்வர் அண்டா, ஹாட்பாக்ஸ், வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் வெளியானதும் அ.தி.மு.க.வும் களமிறங்கி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாள் நலத்திட்ட உதவி என்ற பெயரில் பல்வேறு பரிசுப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சில தொகுதிகளில் ஹாட்பாக்ஸ், சில்வர் தட்டு, வேட்டி, சட்டை துணி, சேலை, குடை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே வாக்காளர்களை கவரும் போட்டி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அடுத்த கட்டமாக 3 கிராம் வெள்ளி நாணயம், 35 இன்ச் டிவி, எலக்ட்ரிக் ஸ்டவ், பால் குக்கர் போன்ற பொருட்களும் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வாக்காளர்களிடையே பரவலாக பேசப்படுகின்றன.
இதனால் கோவை மாவட்டத்தில் தேர்தல் சூழல் அதிகரித்து, வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்