உடனடி செய்தி

மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் ரீல்ஸ் சர்ச்சை; பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறி

மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் ரீல்ஸ் சர்ச்சை; பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அலைபேசி கொண்டு செல்ல தடை அமலில் உள்ள நிலையில், இளைஞர் ஒருவர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்குள் அலைபேசியில் வீடியோ பதிவு செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் அலைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைக்கும் வசதியையும் ஏற்படுத்தியது. கோயிலின் நுழைவாயில்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அண்மையில் 16 வயது சிறுமி ஒருவர் பொற்றாமரைக் குளம் பகுதியில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மற்றொரு இளைஞர் அதே பகுதியில் சினிமா பாடலுக்கு வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருப்பது பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் கூறுகையில், கோயில் போன்ற புனித தலங்கள் சமூக வலைதள பிரபலத்திற்காக பயன்படுத்தப்படக் கூடாது என்றும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அலைபேசி எவ்வாறு உள்ளே கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்து, ஆகம விதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக அறநிலையத் துறையும் போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை ஐகோர்ட் உத்தரவு: தர்மபுரி கோவில் சொத்து ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற நடவடிக்கை
சென்னை ஐகோர்ட் உத்தரவு: தர்மபுரி கோவில் சொத்து ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற நடவடிக்கை
12 நிமிடங்கள் முன்பு
தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் மாயம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அண்ணாமலை அழைப்பு
தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் மாயம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அண்ணாமலை அழைப்பு
19 நிமிடங்கள் முன்பு
இந்தியாவை விளையாட்டு வல்லரசாக்க ரூ.36,441 கோடி: கேலோ இந்தியா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவை விளையாட்டு வல்லரசாக்க ரூ.36,441 கோடி: கேலோ இந்தியா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
23 நிமிடங்கள் முன்பு
வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு கடும் எச்சரிக்கை: தப்பிக்க விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதி
வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு கடும் எச்சரிக்கை: தப்பிக்க விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதி
23 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்