உடனடி செய்தி

தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் மாயம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அண்ணாமலை அழைப்பு

தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் மாயம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அண்ணாமலை அழைப்பு
தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் மீட்பு அவசியம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 'வீ த லீடர்ஸ்' அமைப்பினருக்காக வெளியிட்ட வீடியோவில் பேசிய அவர், தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வருவதால் பசுமை பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவதாக குறிப்பிட்டார். குறிப்பாக, சென்னையில் 67 சதவீத பரப்பளவு கட்டிடங்களாக மாறியுள்ள நிலையில், வெறும் 10 சதவீதம் மட்டுமே பசுமை நிலங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இருந்த 1.06 லட்சம் நீர்நிலைகளில் 50,197 நீர்நிலைகள் தற்போது காணாமல் போயுள்ளதாகவும், ஆறுகள் மாசடைந்து வருவதோடு காடுகளின் பரப்பளவும் குறைந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். தென் மாநிலங்களிலேயே அதிகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், தற்போதைய நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டுக்குள் கோவை மற்றும் கன்னியாகுமரியைத் தவிர பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாகும் எனவும் அவர் எச்சரித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகள் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று 'வீ த லீடர்ஸ்' அமைப்பினருக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்