உடனடி செய்தி

சென்னை ஐகோர்ட் உத்தரவு: தர்மபுரி கோவில் சொத்து ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற நடவடிக்கை

சென்னை ஐகோர்ட் உத்தரவு: தர்மபுரி கோவில் சொத்து ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற நடவடிக்கை
சென்னை உயர்நீதிமன்றம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல கோவில்களின் நிலங்கள் மற்றும் சொத்துகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஆ. ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், காரிமங்கலம் மற்றும் புலிக்கரை கிராமங்களில் உள்ள கோடலம்மன், செல்லியம்மன், ஈஸ்வரன், பெருமாள்சாமி, திருமலைத்தேவர், எல்லம்மன் மற்றும் கரக சுவாமி கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த இடங்களில் சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, வாடகை வசூல் உள்ளிட்ட செயல்பாடுகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹிந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, மனுதாரர் அளித்த புகார்களை முழுமையாக பரிசீலித்து, கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனுடன் வழக்கையும் முடித்து வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்