நாளைய NEET தேர்வு 2026: முழுக்கை ஆடைக்கு அனுமதி – NTA அறிவிப்பு
சென்னை: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு 2026 நாளை (மே 3) நடைபெற உள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்துகிறது.
இந்த ஆண்டில் சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். சென்னையில் 43 மையங்களில் 21,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வுக்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ள தேசிய தேர்வுகள் முகமை (NTA), மாணவர்கள் தெளிவான தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது. மத நம்பிக்கை சார்ந்த ஆடைகள் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மெல்லிய ஆடைகள் மற்றும் முழுக்கை உடைகள் அணியவும் அனுமதி உள்ளது. ஆனால், இவ்வகை ஆடைகளை அணியும் மாணவர்கள் கட்டாயம் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதாரண காலணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கூடுதல் தகவல்களுக்கு 011-40759000, 011-69227700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கிடையில், மாணவர்களின் மனநலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தின் மூலம் டெலி கவுன்சிலிங் சேவையை வழங்குகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் 14416 அல்லது 104 என்ற எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்