உடனடி செய்தி

நத்தம் அருகே குவாரியில் அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு – உறவினர்கள் முற்றுகை

நத்தம் அருகே குவாரியில் அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு – உறவினர்கள் முற்றுகை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சரளைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியில், இளைஞர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரளைப்பட்டியில் உள்ள சங்கரா ப்ளூ மெட்டல் குவாரி, ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகன் விஜயபாரதி குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த குவாரியில் எம்.சாண்ட் குவியலில் சுமார் 10 அடி ஆழத்தில், கருப்பசாமி (25) என்ற இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பசாமி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போனதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குவாரியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மணல் அள்ளும் போது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள், குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்