உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

பிளஸ் 2 மாணவி கொலை: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு

பிளஸ் 2 மாணவி கொலை: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 10ஆம் தேதி மாலை மாயமானார். மறுநாள், அருகிலுள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றவாளி தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே 2020ஆம் ஆண்டு கீழஈரால் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். பின்னர், மேல் முறையீட்டின் மூலம் ஜாமீனில் வெளிவந்து, தினமும் தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். பணம் இல்லாத காரணத்தால் அவர் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி பயன்படுத்தி வந்துள்ளார். கிராமப்புறங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து சுற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த நாளில், நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்த பிறகு குறுக்குச்சாலை – குளத்தூர் சாலையில் சுற்றித்திரிந்த அவர், கண்காணிப்பு இல்லாத காட்டுப்பகுதியை தேர்வு செய்துள்ளார். அப்போது இயற்கை உபாதை கழிக்க வந்த மாணவியை தாக்கி மயக்கமடையச் செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சடலத்தை புதருக்குள் இழுத்து வீசி விட்டு தப்பி ஓடியுள்ளார். மேலும், இந்தக் கொலைக்குப் பிறகும் சில நாட்கள் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து, கிராம மக்களிடம் விசாரணை குறித்து கேட்டு வந்ததும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரசார செலவுகள் அதிகரிப்பு: திருப்பூரில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
பிரசார செலவுகள் அதிகரிப்பு: திருப்பூரில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
17 மணி நேரங்கள் முன்பு
திருவள்ளூரில் குவாரி பெயரில் 40 அடி ஆழம் வரை சட்டவிரோத மணல் அகழ்வு: விவசாயிகள் அதிர்ச்சி
திருவள்ளூரில் குவாரி பெயரில் 40 அடி ஆழம் வரை சட்டவிரோத மணல் அகழ்வு: விவசாயிகள் அதிர்ச்சி
17 மணி நேரங்கள் முன்பு
கிண்டி சிறுவர் பூங்கா மூடல்: பறவை காய்ச்சல் காரணமாக 50+ பறவைகள் உயிரிழப்பு
கிண்டி சிறுவர் பூங்கா மூடல்: பறவை காய்ச்சல் காரணமாக 50+ பறவைகள் உயிரிழப்பு
17 மணி நேரங்கள் முன்பு
அனுமதியில்லா சமூக வலைதள பதிவுகள் தடை – தமிழக தேர்தல் அதிகாரியின் முக்கிய அறிவிப்பு
அனுமதியில்லா சமூக வலைதள பதிவுகள் தடை – தமிழக தேர்தல் அதிகாரியின் முக்கிய அறிவிப்பு
17 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்