உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

தமிழகத்தில் நாய்க்கடி அதிர்ச்சி: 95 நாட்களில் 2.09 லட்சம் பாதிப்பு, 13 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நாய்க்கடி அதிர்ச்சி: 95 நாட்களில் 2.09 லட்சம் பாதிப்பு, 13 பேர் உயிரிழப்பு
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்கிடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் 95 நாட்களுக்குள், மொத்தம் 2 லட்சத்து 9,081 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் ஓரளவு தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், கிராமப்புறங்களில் தடுப்பூசி குறைவாக உள்ளதால் அங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டில் 6,25,700 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, 34 பேர் ரேபிஸ் காரணமாக உயிரிழந்தனர். இந்த ஆண்டில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது சுகாதார துறைக்கு சவாலாக உள்ளது. மாவட்ட வாரியாக பார்க்கும்போது, சேலம் மாவட்டம் (12,177), திருச்சி (9,939), திருவள்ளூர் (9,265), திண்டுக்கல் (8,239), விழுப்புரம் (8,213) ஆகிய இடங்களில் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: நாய், பூனை அல்லது குரங்கு கடித்த உடனே காயத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தடுப்பூசி சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், ரேபிஸ் நோய் பரவி உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆழமான காயங்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியுடன், ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) மருந்தும் அவசியம். தடுப்பூசி முதல் நாள், 3ஆம் நாள், 7ஆம் நாள் மற்றும் 21ஆம் நாள் என நான்கு தவணைகளில் கட்டாயமாக செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
16 மணி நேரங்கள் முன்பு
மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா
மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா
16 மணி நேரங்கள் முன்பு
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்
16 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் மீது தி.மு.க. கடும் விமர்சனம் | அரசியல் பரபரப்பு
காங்கிரஸ் மீது தி.மு.க. கடும் விமர்சனம் | அரசியல் பரபரப்பு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்