தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷ் அதிருப்தி வெடிப்பு – அமைச்சருடன் கடும் வாக்குவாதம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. பிரகாஷ், கட்சியின் சமீபத்திய வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட மாற்றத்தால் கடும் அதிருப்தியில் உள்ளார்.
முன்னதாக 2016ஆம் ஆண்டு தளி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 2021 தேர்தலில் ஓசூர் தொகுதிக்கு மாற்றப்பட்டார். இம்முறை மீண்டும் ஓசூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அந்த வாய்ப்பு மேயர் சத்யாவிற்கு வழங்கப்பட்டது.
மேலும், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் இருந்து அழுத்தம் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து தொகுதி மாற முடியாது என பிரகாஷ் மறுத்ததால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சூளகிரி அருகிலுள்ள ஓர் ரிசார்ட்டில் தங்கியிருந்தார். அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் எம்.எல்.ஏ. பிரகாஷ் ஆகியோர் அங்கு இருந்தனர்.
அந்த நேரத்தில், அமைச்சர் சக்கரபாணி, பிரகாஷின் தோளில் கை வைத்து பேச முயன்றபோது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ், “என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது நீங்கள்தான்” என்று கூறி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியினரின் தகவல்படி, பிரகாஷிற்கு சீட் வழங்கப்படாததற்கு சக்கரபாணி காரணம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனால் அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
7 மணி நேரங்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
7 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
7 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்